சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6000 தெருக்களில் முழுக்கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே உள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னையில் தற்போது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தடுப்புப் பணிகள் பற்றி பேசும்போது ‘சென்னையில் உள்ள 39,600க்கும் மேற்பட்ட தெருக்களில் 16 சதவீத தெருக்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது சுமார் 6000 தெருக்கள். அதனால் இந்த பகுதிகளில் முழுகவனம் செலுத்தவுள்ளோம். அதே போல வீட்டில் தனிமைப்படுத்த மக்களை அரசு மருத்துவர்கள் தினமும் தொலைபேசி மூலமாக பேசி கண்காணித்து வருகின்றனர். தொற்று வரலாம் என சந்தேகிக்கப்படும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களை செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.