சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Filed under: தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.