சென்னை காவல்துறை எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

சென்னையில் காவல்துறை பிராங்க் வீடியோ எடுக்கும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ரோகித் குமார் வீடியோ வெளியிடும் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய ஐந்து யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ரோகித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் மக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.