கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குவதற்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரை!

Filed under: சென்னை |

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டது. இதனை அடுத்து இந்து அமைப்பினரும் மற்றும் பாஜகவும் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கினாலும், யூடியூப் சேனலை முழுமையாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிர்வாகத்துக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளனர்.