சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம் இடையே ரயில்கள் ரத்து?

Filed under: சென்னை |

மின்சார ரயில்களின் நேரங்களில் மாற்றம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் வழியில் ரயில் தளவாட பராமரிப்பு பணிகள் காரணமாக நேரத்தில் மாற்றம் மற்றும் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட்டிலிருந்து ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து. சென்னை பீச்சிலிருந்து அரக்கோணம் நள்ளிரவு 1.20 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்லிருந்து ஆவடி இரவு 11.55 மின்சார ரயில் ஜூன் 8ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டிலிருந்து ஆவடி இரவு 11.30 மற்றும் 11.45 ரயில் 8ம் தேதி முழுமையாக ரத்து, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்லிருந்து சென்ட்ரல் 9.50 மணி ரயில் 8ம் தேதி ஆவடியிலிருந்து சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து, அரக்கோணத்திலிருந்து வேளச்சேரி அதிகாலை 4 மணி ரயில் 7, 8, 9 தேதிகளில் அரக்கோணத்திலிருந்து சென்னை பீச் இடையே பகுதியாக ரத்து, பட்டாபிராமிலிருந்து வேளச்சேரி இரவு 8.25 மணி ரயில் 9ம் தேதி ஆவடியிலிருந்து சென்னை கடற்கரை இடையே ரத்து, வேளச்சேரியிலிருந்து பட்டாபிராம் இரவு 10.30 மணி ரயில் 8ம் தேதி சென்னை பீச்சிலிருந்து பட்டாபிராம் இடையே பகுதியாக ரத்து, பட்டாபிராமிலிருந்து சென்னை செண்ட்ரல் இரவு 10.45 மணி ரயில் 8ம் தேதி ஆவடியிலிருந்து சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.