சென்னை பிவிஆர்&ரின் புது முயற்சி!

Filed under: சினிமா,சென்னை |

சென்னை பிவிஆர் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் தியேட்டர்கள் திறப்பதற்காக முடிவு செய்துள்ளது.

பிவிஆர் திரையரங்க வளாகம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட தியேட்டர்கள் திறந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்தான் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதாக பிவிஆர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்டணம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் சென்று திரைப்படமும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டதை அடுத்து இந்த திரையரங்குகள் விமான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.