சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சி சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசர நிலைக்கு தொடர்புக் கொள்வதற்கு எண்களை அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே சென்னை முழுதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் காரணமாக சில பகுதிகளில் வேகமாக மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்குதல், மின்கசிவு, மின் வெட்டு போன்ற புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்ணான 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்களான 044-25619207, 044-25619208 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர சென்னை மாநகராட்சி செயலியான ‘நம்ம சென்னை ஆப்’ மூலமாகவும், மாநகராட்சியின் டுவிட்டர் கணக்கு வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.