சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம் !

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் சந்திக்கும் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார் என்பதும் அதிமுகவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இவரது பெயரில் தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

எனவே முதலில் பூங்குன்றனை தனது பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள சசிகலா தரப்பு முயற்சிகள் செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா பதிவு செய்த வழக்கிற்கும் பூங்குன்றன் பக்கபலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே சசிகலா சென்னை வந்தவுடன் சந்திக்கும் முதல் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது