சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!

Filed under: இந்தியா,சென்னை |

துபாயில் இருந்து சென்னை வந்த இரு ஆண் பயணிகளிடம் இருந்து, 1.38 கிலோ தங்கம், மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த, இரு ஆண் பயணிகளை, சுங்கத்துறையினர் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது 24 தங்கத்துண்டுகள் லேப்டாப் சார்ஜரில், கருப்பு டேப் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த தங்கத் துண்டுகளின் எடை 1.38 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.58.04 இலட்சம். இவை தவிர மேலும் 15 ஐ-போன்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தி வந்த இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.