செல்போன் கடை அடித்து உடைப்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சியில், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உதவியாளர் அஜித் சேதுபதி தனது கூட்டாளிகள் உட்பட ஆறு பேருடன் சேர்ந்து கொண்டு செல்போன் கடையை அடித்து நொறுக்கியதாகவும் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.