ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளனர்.

ஆலையிலிருந்து அதிகமாக வெளிவரும் மாசு காரணமாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள் என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பம் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்றும், ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
Related posts:
கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவருக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து - 2 அர்ச்சகர்கள் கையில் தீ ...
திருச்சியில் இன்று போராட்டம்: சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
தெப்பக்குளம், NSB சாலை வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம். மேயர் அன்பழகன் தகவல்.



