செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!

Filed under: தமிழகம் |

ஜூன் 8

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் மதுக்கரை போலீசார் லபோ… திபோ….கோவையில் பரபரப்பு!

கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் மனைவி சுமதி என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2016 இல் சுமதி மேற்படி மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்தன.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுமதி தனது வீட்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி உள்ளார். கேமரா பொருத்தியதால் தனது குடும்பத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், இயற்கை உபாதைக்கு சென்றாள் கேமராவில் தெரிவதாக மணிகண்டன் புகார் தெரிவித்த காரணத்தினால் சுமதிக்கு மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மணிகண்டன் அம்பேத்கார் சதுக்கத்தில் உள்ள ஏர்டெல் டவரில் ஏறி நின்று சுமதி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செல்போன் டவரின் கீழிலிருந்து மைக் வழியாக சமாதானம் பேசி கீழே இறக்கி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மணிகண்டன் மிரட்டியதால் அப்பகுதியில் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.  இதுகுறித்து நாம் மதுக்கரை காவல் துறையினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது  பதில் கூற மறுத்துவிட்டார்கள்.!