செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

Filed under: தமிழகம் |

செவிலியர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரையடுத்த வற்றாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா (32). இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற ஒரு மகன்கள். சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறு பாட்டால் தகராறு எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சின்னராசு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, அவரது மனைவி மற்றும் 2 மகன்களைக் காணவில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகளில் தேடியபோதும் அவர்களைக் காணததால் சின்னராசு பதறினார். பின்னர், ஒரு கிணற்றில் மனைவ்யின் செல்போன் கிடைத்தால், அதிர்ச்சியடைந்து போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறினார். இன்று காலை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் தேடினர். அதில், சூர்யாவும், உதயனும் சடலமாக மீட்கபப்ட்டனர். தற்போது மற்றொரு குழந்தையைத் தேடும் பணி நடந்து வருகிறது. குடும்பப் பிரச்சனை காரணமாகக் குழந்தைகளைக் கொன்று, சூர்யாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.