சென்னை பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வின் தேதியை அறிவித்தது!

Filed under: தமிழகம் |

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தினால் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்றும் மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சென்னை பல்கலைகழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.