அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ள நிலையில் பிரக்ஞானந்தா வெற்றிபெறவேண்டுமென இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர். நேற்று நடந்த இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆனது. இன்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்போடியில் யார் ஜெயிக்கப் போகிறர்கள் என்று உலகமே எதிர்பார்த்துள்ளது. இருவருக்கும் இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சம பலத்தில் பிரக்ஞானந்தா போராடி வருகிறார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. எனவே நாளை டைபிரேக்கர் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெறவுள்ளது.