சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார்!

Filed under: சினிமா |

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகாரளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தேனாம்பேட்டையிலுள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது புகார் மீது காவல்துறையினர் நடக்க எடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நகைகளை காணவில்லை என்று கூறிய நிலையில் அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்தான் அந்த நகைகளை திருடியதாக கண்டுபிடிக்கப்பட்டது.