ஜப்பானில் வசூலை குவித்த ஆர்.ஆர்.ஆர் படம்!

Filed under: உலகம்,சினிமா |

“ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் ஜப்பானில் மட்டும் ரூ.119 கோடி வசூலை அள்ளி உள்ளது.

ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்படம் சாதனையை முறியடித்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. ஜப்பான் நாட்டில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் ரிலீசானது. ஜப்பானில் மட்டும் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுதும் இப்படம் ரூ.1,235 கோடி வசூலித்துள்ளது.