ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர். ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி பலமுறை என்னை சந்தித்து பேசியுள்ளார். என் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்.

ஆசிரியர் மீனாட்சி சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை