ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இவ்வாண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கோடிக்கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க ஜியோ சினிமா திட்டமிட்டு வருகிறது. சமீபகாலம் வரை ஹெச்பிஓ மேக்ஸ் தொடர்கள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஹெச்பிஓ & ஹாட்ஸ்டார் இடையேயான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஹெச்பிஓ தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற ஜியோ சினிமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பிரபலம் வாய்ந்த கேம் ஆப் த்ரோன்ஸ், லாஸ்ட் ஆப் அஸ், வெஸ்ட் வோர்ல்ட் ஆகிய பல தொடர்கள் ஹெச்பிஓ வசம் உள்ளதால் ஐபிஎல்லிற்கு பிறகும் ஜியோ சினிமாவின் வாடிக்கையாளர்களை அதிகரிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.