தமிழ் வழி  யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற 13 பேருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.

Filed under: தமிழகம் |

தமிழ் வழி  யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற 13 பேருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.

யோகாசன பயிற்சி என்றாலே சமஸ்கிருதம் மற்றும் வடமொழிப் பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதற்கு மாற்றாக, தமிழ்ப் பெயர்களைக் கொண்டு 71 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு திருப்பூரைச் சேர்ந்த சகோதரர் மணிவண்ணன் அவர்கள் யோகாசனத்தை பயிற்றுவித்து வருகிறார்.

அவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 13 மாணவர்கள், புதுச்சேரி அரசு நடத்திய 29-வது அகில உலக யோகாசன போட்டியில் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அம்மாணவ, மாணவிகளை திருப்பூரில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு

தமிழ்வழி யோகாசனம் சிறக்கட்டும்..! வெல்லட்டும்.!! என்று  x தளத்தில் பதிவிட்டுள்ளார்