ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி – அதிர்ச்சியூட்டும் தகவல்!

Filed under: உலகம் |

ஈரானில் 2.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். பின்னர் மேலும், 3.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

அரசு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் கூறியது: இது வரை கொரோனாவால் 14,000 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானி மக்கள் தொகை 8 கோடி உள்ளது.

மேலும், ஈரானில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில், அதிபர் இந்த தகவலை தெரிவித்தது பெரும் அதிர்ச்சியையும் மற்றும் குழப்பத்தையும் உண்டாகியுள்ளது உள்ளது.