ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?- டி.ராஜேந்தர் விளக்கம் !

Filed under: தமிழகம் |

t-rajendarசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அவை எல்லாம், அரசியல் ஆதாயத்துக்காக அல்ல. அதிமுக கேட்டுக் கொண்டதால் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறேன்.

தற்போது, ஜெயலலிதா விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வியப்படைவதாக தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பில் வியப்படைய என்ன இருக்கிறது. வழக்கு நீதிமன்றங்களில் இருந்து மாறும்போது நீதிபதிகள் பார்வையும் மாறுகிறது. அந்த வகையிலேயே ஜெயலலிதா விடுதலையாகி இருக்கிறார்” என்றார்.