டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்!

Filed under: உலகம் |

Tata Neu என்ற செயலியை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே செயலியின் வாயிலாகப் பயனர்கள் பல அம்சங்களைப் பெறுவார்கள். ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் இதில் உள்ளது.

 

இதில் மளிகை, டிக்கெட்டிங், உணவு விநியோகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இதில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியும் உள்ளது.
Tata Digital நிறுவனம் கடந்த பல மாதங்களாக இந்த செயலியின் வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூப்பர் ஆப் மூலம், பணப் பரிமாற்றம் தொடங்கி டிக்கெட்டிங் வரை அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளில் கால் பதித்துள்ளது.

ரீசார்ஜ், பிராட்பேண்ட், மின்சாரம், கேஸ், லேண்ட்லைன் கட்டணம், டிடிஎச் சந்தா, தனிநபர் கடன், அட்வான்ஸ் பேமென்ட், டிஜிட்டல் தங்கம், காப்பீடு போன்ற வசதிகள் உள்ளன. கூடுதலாக, இது வீட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கார்டு பரிவர்த்தனைகள் போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

மேலும், தாஜ் போன்ற ஸ்டார் ஹோட்டல் முதற்கொண்டு கையேந்தி பவன் வரை அனைத்தை ஆர்டர் செய்து நீங்கள் ருசிக்கலாம். தற்போது குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிறுவனங்களை நீட்டிக்க உள்ளது.