டாஸ்மாக் பார்களை மூட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!

Filed under: தமிழகம் |

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்கு மூடவேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தாரவுக்கு ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என கோரிக்கை விடுக்காத நிலையில் தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு வாதம் செய்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.