டிஆர்பியை எட்டிப்பிடிக்க சன் டிவி எடுத்த ஆயுதம்.! CWC நிகழ்ச்சி காப்பியா?

Filed under: சினிமா |

டிஆர்பியை எட்டிப்பிடிக்க சன் டிவி எடுத்த ஆயுதம்.! CWC நிகழ்ச்சி காப்பியா?

சமீபகாலமாகவே சன் தொலைக்காட்சி நிறுவனம் மக்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் எதுவும் செய்யாதது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாம். பல்வேறு வருடங்களாக சன் டிவி நம்பர் ஒன் இடத்தில் இருந்து சாதனை புரிந்தது.

தற்போது அந்த நம்பர் ஒன் இடம் பறிபோகும் பயத்தில் சன்டிவி இருக்கிறதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒரு காலத்தில் கவருகின்ற விதமாக நிகழ்ச்சிகளை சன் டிவி நிறுவனம் வழங்கியது. டீலா நோ டீலா, தங்கவேட்டை, அசத்தப்போவது யாரு, பெப்ஸி உங்கள் சாய்ஸ் போன்ற சுவாரசியமான பல நிகழ்ச்சிகள் சன்டிவி அறிமுகப்படுத்தியது.

ஆனால், தற்போது சன் டிவி முழுக்க முழுக்க வெறும் சீரியல் தொடர்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது.காலை முதல் இரவு வரை சன் டிவியில் வெறும் சீரியல்தான் இதனாலேயே ஒரு கட்டத்தில் சன் டிவியை ரசிகர்கள் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.

அத்துடன் சீரியல்களால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்த நிலையில், தற்போது சன் தொலைக்காட்சியில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல ஒரு புதிய நிகழ்ச்சியை நடத்த இருக்கிறதாம்.

பிரபல நடிகர் ஒருவரை வைத்தும், யுடியூப் சேனல் சமையல் பிரபலங்களை வைத்தும், தொகுத்து வழங்க இருக்கின்றதாம். எனவே, ரியாலிட்டி ஷோவில் திரும்பவும் விட்ட டிஆர்பியை பிடிக்கின்ற முயற்சியில் சன் டிவி ஈடுபட்டு வருகின்றதாம்.