டிசம்பர் 3 ல் சசிகலா விடுதலை !

Filed under: அரசியல்,தமிழகம் |

வருகின்ற டிசம்பர் 3ல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள் சசிகலாவும், இளவரசியும் அவர்கள் வெளியே வருவதற்கான அணைத்து முயற்சிகளையும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் செய்து வருகின்றனர்.

சிறையை விட்டு வெளியே வந்ததும் சென்னை செல்லும் சசிகலா அங்கே முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்திக்க இருக்கிறார். அவர்களுடன் சில ஆலோசனைகள் செய்கிறார். பின்னர் டிசம்பர் ஐந்தாம் தேதி அம்மா சமாதிக்கு செல்லும் சசிகலா, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் பண்ணிய மாதிரி தர்மயுத்தத்தை தொடங்குகிறார்.

அந்த தர்மயுத்ததில் கிட்டத்தட்ட 30 அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்கின்றனர். ஏழு அமைச்சர்களும் தாங்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்பதை காண்பிக்க பங்கேற்க இருப்பதாக தலவல்கள் வெளிவந்துள்ளது.பல மாவட்ட செயலாளர்கள் லட்சக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் அந்த தர்மயுத்ததில் பங்கேற்க போகிறார்களாம்.இதனால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி உடைந்தால் திமுக இதை முன் வைத்து தமிழக ஆளுநரிடம் பெரும்பான்மை பலத்தை அதிமுக காட்டவேண்டும் என்று கோரிக்கை வைக்கும். சசிகலா பின்னே எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் இருக்கும்போது கண்டிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முட்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.