டிடிவி தினகரனின் திட்டவட்டம்!

Filed under: அரசியல் |

டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்பது அனைவருக்கும் தெரியுமென தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆறுமுகசாமி ஆணையத்தை வைத்து அரசியல் மட்டும்தான் செய்யலாம் என்றும் வேறு எதற்கும் இந்த அறிக்கை பயன்படாது என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் சசிகலா உட்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் சசிகலாவை நேரில் விசாரணை செய்யவில்லை என்பது முரண்பாடாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், “ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கை போல உள்ளது. உண்மை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பார்ப்போம். இந்த அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாக செல்வார். மருத்துவர்கள் அந்த நேரத்தில் எது சரியோ அதை செய்தனர். இந்த அறிக்கையை சிபிஐ விசாரித்தால் ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும்” என தெரிவித்துள்ளார்.