டிடிவி தினகரனின் தேர்தல் அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இம்முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி செய்த தவறால்தான் அதிமுக சின்னம் இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக குறித்து தற்போது பேசுவது தேவையற்றது. தேர்தல் சமயத்தில் அது குறித்து பேசிக் கொள்ளலாம். அடுத்த மாத இறுதியில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.