பால் மற்றும் கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
ஆம், கேஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் டீ கடைகளில் டீ, காபி விலை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.
பால், கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ விலை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும் விற்கப்படுகிறது. பார்சல் டீ ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், பார்சல் காபி ரூ.35 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது.