டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, மே 2

நாம் ஏற்கனவே டாக்டர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் தணிகாசலம் ஒரு டுபாக்கூர் டாக்டர் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தோம். தணிகாசலம் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது காரணம் இதுதான், நான் கொரோனாவை குணப்படுத்துவேன் என சொல்லி சமீபகாலமாக முகநூலில் பேசி அதை தனது கைதடியில் மூலம் யூ டியுபியில் பரப்பி வருகிறார். அவர் ஒரு போலி டாக்டர், அவர் ஒரு மனநோயாளி என்ற விபரம் கூட தெரியாமல் சில நெட்டிசன்கள் அதை வைரலாக பரப்பி வருகிறார்கள்.

வீடியோவில காட்டு கத்தலாக கத்தியிருக்கும் சில விசயங்கள் இது தான்,

இன்னும் எத்தனை லட்சம் பேரை சாகடிக்க போறீங்க. மருந்து இல்லன்னா மருந்து இல்லன்னு சொல்லிட்டு போங்க பிரச்சனை இல்ல, நான் மருந்து இருக்குன்னு சொல்றேன், குணமாகுதுன்னு சொல்றேன். ஒரு நாளில் குணமாகின்றது என்று சொல்கிறேன். ரொம்ப மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் குணப்படுத்துகிறேன்னு சொல்றேன். ஒரு கையில் மருந்து வச்சிருக்கேன் இன்னொரு பக்கம் எந்த டிவியை பார்த்தாலும் மருந்து இல்ல, கையை தொடாத காலை தொடாதன்னு சொல்றிங்க, ஸ்டேஹோம்னு சொல்றீங்க….என்ன கூத்துய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இவ்வளவு மரணங்கள் நடந்தும் இன்னும் கூட கருணை கூட உங்களுக்கு சுரக்கவில்லை என்றால் நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள். என்ன மனிதர்கள் என்பதை நான் கேட்கிறேன் உலக சுகாதார அமைப்பு என்ன செய்யுது இத்தனை மரணங்களுக்கு கரணம் யார். என்னிடம் ஐந்து கோவிட் நோயாளிகளை கொடுங்கள் அல்லது என் உடம்பில் அந்த கோவிட் வைரசை செலுத்துங்கள் நான் என் மருந்தை சாப்பிட்டு குணப்படுத்தி காண்பிக்கிறேன், அப்பாவது உங்களுக்கு புத்தி வருதான்னு பார்க்கிறேன் ஆற்றாமையால் தான் இவ்வளவு கத்துகிறேன். மக்களை பிச்சை எடுக்க வச்சிட்டிங்க மக்களை விட்டுடுங்கய்யா பாவம் என்று மத்திய மாநில அரசுகளை மிக கடுமையாக சாடியிருக்கிறார். அந்த விடியோவை பார்க்கும்பொழுது ஒரு மன நோயாளி கத்துவது போல் தான் உள்ளது. இந்த கூத்து இப்படி என்றால் இப்பொழுது இன்னொரு கூத்தும் அரங்கேறிவருகிறது.

தணிகாசலம் அவர்களை தமிழக அரசு அணுகியதாகவும் நீங்க கேட்ட மாதிரி ஐந்து கொரனோ வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை தருகிறோம் உங்களால் ஐந்து நாளில் குணப்படுத்தி தர முடியமா? என்று கேட்டதாகவும், அதன்படி ஐம்பது வயதுக்கு மேற்பட்ட கொரனோ நோயாளிகளை அரசு அனுப்பியதாகவும், அதில் இரண்டு பேரை தணிகாசலம் குணப்படுத்தி விட்டதாகவும், அதனால் தமிழக அரசே தணிகாசலத்தை பாராட்டியதாகவும் மீதமுள்ள நோயாளிகள் முற்றும் குணமானவுடன் தமிழன் தணிகாசலம் புகழ் உலகமெங்கும் பரவும் என்றும் அதன் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தகவல்கள் இணைய தளத்தில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது குறித்து தமிழக அரசு எந்த தகவலையும் தெரிவித்ததாக தெரியவில்லை. அதேபோல் குணமடைந்த நோயாளிகள் யார் எந்த ஊர் என்ற விப்ரங்களை போலி டாக்டர் தணிகாசலமும் தெரிவிக்கவில்லை.

இதற்க்கு முன்பு இதேபோல் சென்னையில் அரசுக்கு தெரியாமல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாகவும் தன் முகநூல் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டு இருந்தார், அதேபோல்  சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளருக்கு சிகிச்சை அளித்ததாக அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். யார் அந்த பத்திரிக்கையாளர் ? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? சென்னையில் பல பேரை குணப்படுத்துகிறேன் என்று சொல்லியே, கொரோனா தொற்று சென்னையில் இவ்வளவு வேகமாக பரவ காரணம் திருத்தணிகாசலமா கூட இருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது.

டாக்டர் என்று தன்னை தானே கூறி அலையும் போலி மருத்துவர் திருத்தணிகாசலம் ஒரு டுபாக்கூர் என்பதற்கு சிறந்த உதாரணம் இதோ, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கொரோனோ நோய்க்கு ஊமத்த இலை சாரை பாலில் கலந்து குடித்தால் குணமாகும் என பேட்டி அளித்திருக்கிறார். அதை பார்த்த ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பழமனேரி என்ற ஊரை சேர்ந்த நாகராஜ் என்பவர் 11 பேருக்கு தணிகாசலம் கூறிய மருந்தை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட 11 பேரும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு நாகராஜிடம் போலிஸ் விசாரித்ததில், அவர் பிரபல சேனலில் தணிகாசலம் கூறி வந்த மருத்துவ குறிப்பு வைத்து வைத்தியம் செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு ஆந்திராவில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நேற்று முகநூலில் ரங்கராஜ் பாண்டே பேட்டியின் பொழுது, அவருக்கு பதில் கூற முடியாமல் திணறினர் இந்த டுபாக்கூர் டாக்டர். கொரனோ வைரசிக்கு மருந்து இல்லை என்பது அவர் உளறலில் இருந்தே தெரிந்துள்ளது. மேலும் இவர் தன்னிடம் கொரானா சிகிச்சைக்கு வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்றும், தன்னிடம் தமிழக மக்கள் யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என்றும் பிதற்றியிருக்கிறார். அப்படியென்றால் இதுவரை அவர் பேசியது எல்லாம் பொய் என்றே தெரிகின்றது. தன்னிடம் ஒரு பத்திரிக்கையாளர் கொரானா வைரஸ் சம்பந்தமாக சிகிச்சைக்கு வந்தார் என்று இவரே  தன் முகநூலில்  கூறியிருக்கிரார். அப்படி என்றாம் தணிகாசலம் ஒரு மனநோயாளி தானே.

அவர் மனநோயாளி என்பதற்கு இன்னும் பல விசயங்களை சொல்லலாம். சீனா என்னிடம் வந்து மருந்து வாங்கியது என முகநூலில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் இவரிடம் வழக்கறிஞர் ஒருவர், லண்டனில் வசிக்கும் தனது உறவினருக்கு கொரோனா தொற்று சம்மந்தாக ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு இந்த திருத்தணிகாசலம் ஒரு கோரிக்கை வைத்தார் அது என்ன தெரியுமா?  இங்கிலாந்து அரசு தனி விமானம் மூலம் தன்னை சென்னையில் இருந்து அழைத்து செல்லவேண்டும் என்பது தான். இதை கேட்ட வழக்கறிஞருக்கு தலை சுற்றியதாம். தனது முகநூல் பக்கத்தில் வெளிநாடுகளில் மருந்தை பெற எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும் என விளம்பரம் செய்யும் இந்த போலி டாக்டர் யாராவது இவரிடம் சிகிச்சை சம்மந்தமாக பேசினால், உடனே எனக்கு தனி விமானம் வேண்டும் என கோரிக்கை வைக்கிறாராம். இதுபோல் இவரின் முகநூல் பக்கத்தை பார்த்து ஏமாந்தவர்கள் ஏராளம்.

தமிழக அரசையும், முதல்வரையும் இழிவாக பேசிய ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறை. மனநோயாளி போல் இந்த அரசை வசைபாடும் போலி டாக்டர் தணிகாசலத்தை மட்டும் விட்டு வைப்பது ஏன்? என்ற மர்மம் தான் இன்னும் விளங்கவில்லை.