டெல்லி சட்டசபை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரம் !

Filed under: அரசியல்,இந்தியா |

233277-narendramodi2டெல்லி சட்டசபை தேர்தல் பல திருப்பங்களை கொண்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை நம்பி கிரன்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. இதனால் டெல்லி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறுகிறார்கள். கிரன்பேடிக்கு அரசியல் நிர்வாகம் தெரியாது என்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த பலர் தற்போது டெல்லி பா.ஜ.க.வில் நொந்துபோயுள்ளனர். இதை புரிந்துகொண்ட மோடி தற்போது களத்தில் இறங்கி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி சுமார் 25 இடங்களில் பலம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அக்கட்சித்தலைவர் பல அரசியல் குழப்பங்களை செய்து வந்தாலும் அக்கட்சிக்கு சுமார் 25 அல்லது 28 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தற்போது முழுமையாக அழியும் நிலையில் டெல்லியில் உள்ளதாக கூறுகிறார்கள். அக்கட்சி 3 அல்லது 4 இடங்களை பெறக்கூடிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி தலைவராக கடும் எதிர்ப்பு வெளிப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். ராகுலின் தனி செயலாளர்கள் தற்போது பிரியங்கா காந்திக்கு உதவுவதாகவும் செய்திகள் பரவுகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்னும் துதிபாடிகளின் புகழ்ச்சிக்கு அடிபணிவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர், தன்னுடைய ஆணவ பேச்சுக்களால் மாநில காங்கிரஸ் தலைவர்களை புறக்கணித்ததாகக் கூறுகிறார்கள். பெங்களூரில் பல தனியார் பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொந்தரவு நடைபெற்றதாக பெற்றோர்கள் புலம்புகிறார்களாம். அனைத்துக்கும் செவி சாய்க்காமல் வறட்டு கௌரவம் கொண்டு காங்கிரஸ் ஆட்சி நடத்துவதை கர்நாடக மக்கள் வெறுப்பதாக செய்திகள் உலவுகின்றன. ஆனால் இதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் தலைமை, துதிபாடிகளின் ஆலோசனைகளை ஆதரித்து, கர்நாடக முதல்வருக்கு ஆதரவு கொடுக்கிறதாம். ஆக மொத்தம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறார்கள். கர்நாடக அமைச்சரவையில் இருந்து பல அமைச்சர்கள் விலக திட்டம் தீட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு ஆதரவு இழக்கும் ஒரே கட்சியாக உலகில் அகில இந்திய காங்கிரசை குறிப்பிடுகிறார்கள்.

இலங்கையில் புதிய அரசு அமைந்து தமிழர்களுக்கு புதிய உரிமைகளை பெற்றுத்தர சம்மதித்து விட்டதாகக் கூறுகிறார்கள். இதனை எதிர்த்து தற்போது தமிழக அரசியல்வாதிகள் இலங்கை அமைச்சர்களை மடக்க திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களின் எழுச்சி, தங்கள் அரசியல் வாழ்வுதனை தமிழகத்தில் அழித்து விடும் அபாயம் உள்ளதாக கருதி, தமிழர்களின் நலன்களை முடக்க நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதாம். தமிழர்களின் உரிமைகளை முடக்கி வைத்து, அவர்களுக்கு அதிக செல்வாக்கை கொடுக்காமல், தங்களின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக்கி தமிழ் குலத்தை அழிக்கும் நடவடிக்கைளுக்கு இலங்கை தமிழ் அமைச்சர்கள் ஆதரவு கொடுக்கக்கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளதாக இலங்கையில் பரவலாக கிசுகிசுக்கிறார்களாம்.

பா.ஜ.க.வில் நரேந்திரமோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை முற்றிலுமாக அழிந்துவிட்டதாம். சுற்றிலும் குஜராத் மாநிலத்தலைவர்களை வைத்து செயல்படும் மோடி, தன்னுடைய எண்ணங்களை தாய்மொழியில் விவாதிக்கிறாராம். பின்னர் சரியான முடிவு எடுக்கப்பட்டு பிறகு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தும் மரபை ஏற்படுத்தி உள்ளார். இதனால் பல ரகசிய முடிவுகள் பா.ஜ.க. முக்கிய தலைவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் காங்கிரசும் சிக்கி தவிக்கிறதாம். புத்திசாலித்தனமான மோடி அரசியல் துதிபாடிகளை முற்றிலும் அழித்துவிட்டதாக கூறுகிறார்கள்.