தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உதவியா?

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

270 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் கடத்திய வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சபீர் அலி என்பவர் சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்படுகிறது. தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உதவியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பல பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.