தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி !

Filed under: சென்னை,தமிழகம் |

Feb - 16 - Bதமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இவருடன் சேர்த்து 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜ் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். முன்வரிசையில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.