தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 738 !

Filed under: சென்னை,தமிழகம் |

பீலா ராஜேஷ்

சென்னை : கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துவரும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார்,  அவர் கூறியதாவது :

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு, இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48, இதில் 42 நபர்களின் தொற்று புதுடெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும் அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். மேலும் இதுவரை 6,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும் நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் பாடுபடுகிறோம் என தெரிவித்தார் பீலா ராஜேஷ்.