தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா – ஆந்திர பா.ஜ.க.வினர்!

Filed under: அரசியல்,இந்தியா |

Rajnath Singhஇந்திய பொருளாதாரம் சென்ற ஆட்சியில் நன்றாக சுவைத்து அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த குறைந்தது 18 மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். மேலும் இந்திய பாதுகாப்பை அந்நிய உணர்வுகளுக்கு மதிப்பளித்து பலவீனமாக்க, இந்தியாவை அடிமைப்படுத்த திட்டமிட்ட செயல்கள் இந்தியத்தாயால் காப்பாற்றப்பட்டுள்ளனவாம். பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துக்கூறுகிறார்கள். வியாபாரிகளின் தந்திரம் விலைகுறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, மீண்டும் உச்சத்திற்கு விலைவாசி உயரலாம் என்ற கணிப்பு உள்ளது.
தமிழக நலன்களை வெற்றிகரமாக சென்ற ஆட்சியில் முடக்கிப்போட்ட பெருமை காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் தமிழக கட்சிகளை சாரும் என்கிறார்கள். மாநிலங்களுக்கு சட்டப்படி அளிக்கவேண்டிய நிதியினை காலம் தாழ்த்தியும், நிறுத்திவைத்து வேடிக்கை பார்த்தார்களாம். விவசாயம், மின்துறை, நீர்வளம் போன்ற துறைகளில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இலங்கை அதிபருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அரசியல்வாதிகள், தமிழக வீதியில் அரசியல் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டதாக கூறுகிறார்கள். தமிழக முதல்வரை பழிவாங்க நினைத்து தமிழக மக்களை துன்பத்தில் ஆழ்த்தினார்கள்.
இந்திய பொருளாதாரத்தை நன்றாக புரிந்து கொள்ளாமல் வீழ்ந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை நடைமுறை படுத்தியதன் விளைவு, இந்திய பொருளாதாரம் தத்தளிக்கிறது. அரசியல் நிர்வாகம் தெரியாத ராகுல்காந்திக்கு மகுடம் சூட ஆசைப்பட்ட காங்கிரஸ் தற்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற தொப்பி கூட கிடைக்காமல் தவிக்கிறது. தலித், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், வாழ்வுக்காக போராடுவதாக பில்டப் காட்டிய காங்கிரஸ், தற்போது ஒருங்கிணைந்த இந்திய மக்களால் அடிபட்டு நிற்பதாக, கூறப்படுகிறது.
ஒரிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் இணைந்து தமிழகத்துடன் கைகோர்த்தால் இந்தியா சும்மா அதிரும். வெறும் 10 இடங்கள் அதிகம் பெற்று தனிப்பெரும்பான்மை கொண்ட பா.ஜ.க. (கூட்டணிகளை சேர்க்காமல்) எதிர்காலத்தில் மாநில நலன்களை கவனத்தில் கொள்வது நல்லது என்ற கருத்து உலவுகிறது. தமிழர்கள் உயர்வுக்கு சென்ற ஆட்சியில் முட்டுக்கட்டை போட்டவர்கள் கேரளா, கர்நாடக சுயநல அரசியல்வாதிகள் என்பது சுட்டெரிக்கும் உண்மை. தற்போது கர்நாடகம், ஆந்திர சுயநல பா.ஜ.க. அரசியல்வாதிகள், தமிழக உயர்வுக்கு தடை போடலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளதால், தமிழகத்தில் அதிகம் தெலுங்கு பேசும் மக்கள் உள்ளதால் தமிழக உரிமையை பறிப்பது எளிது என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக தலைநகரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு எந்த தடையும் இல்லை என்று தலைநகர அதிகார வர்க்கம் அடித்து கூறுகிறது. முல்லைபெரியாறு பிரச்னையில் தேவையின்றி அதிபுத்திசாலித்தனமாக தலைநகர அதிகார வர்க்கத்தின் ஆலோசனைகளை புறக்கணித்ததின் விளைவு, தற்போது வாய்பொத்தி கைகட்டி நிற்கும் நிலைக்கு தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கை பூச்சாண்டி காட்டி தமிழக நலன்களை புறக்கணிக்க போடுகின்ற திட்டங்கள் தமிழ் குலத்தினால் தவிடுபொடியாக ஆக்கப்படும் என்று எச்சரிக்கிறார்களாம்.
தென்னக நதிகளை இணைப்போம் என்று மார்தட்டும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குறைந்தது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற கருத்து உலவுகிறது. தமிழகத்திற்கு இந்திய சட்டப்படி கொடுக்கவேண்டிய நலன்கைள தடுக்க எந்த அரசுக்கும் அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை என்ற ஆவேசம் தமிழகத்தில் எழுந்துள்ளதாம். ஆட்சியில் இறுமாப்புடன் செயல்பட்டு முன்னாள் ஆந்திரமுதல்வர் ராமாராவ் கட்சிக்கு பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை மறுத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க.விடம் கையேந்தி பிச்சை கேட்பதாக தலைநகரில் கிண்டலடிக்கிறார்களாம்.
தமிழகத்தில் பா.ஜ.க. தலைவராகப்போகும் புதிய அரசியல்வாதி பா.ஜ.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் கூறுகிறார்கள். காரணம் அடுத்த பா.ஜ.க. தமிழக தலைமை வெறும் தலையாட்டி பொம்மையாகத்தான் செயல்படும் என்ற கருத்து எழுந்துள்ளது.