தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடி !

Filed under: சென்னை,தமிழகம் |

005கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான விதிமுறை களை கூட்டுறவுத்துறை வெளி யிட்டுள்ளது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.5,780 கோடி அள வுக்கான பயிர்க்கடன், நடுத்தர, குறுகிய, நீண்டகால கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழக முதல்வராக ஜெ ய லலிதா கடந்த மே 23-ம் தேதி பதவியேற்றார். தலைமைச் செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக் கையில் கூறிய வாக்குறுதிகளின் படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து சிறு, குறு விவசாயிகள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.5,780 கோடி அள வுக்கான பயிர்க்கடன், நடுத்தர, குறுகிய, நீண்டகால கடன்கள் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகள் கடன் விவரங் களை சேகரித்ததுடன், விவசா யிகளின் நிலம் தொடர்பாக சர்வே எண் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டன.

இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடன் தள்ளுபடி தொடர்பான பரிந்து ரைகளை அரசுக்கு அனுப்பினார். இதை பரிசீலித்த தமிழக அரசு, பரிந்துரைகளை ஏற்று கடன் தள்ளுபடிக்கான விதிமுறைகள் தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை கூட்டுறவுத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளி யிட்டுள்ளார்.

விதிமுறைகள்

மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கடன்களை பொறுத்தவரை குறுகியகால பயிர்க்கடன், விவசாய நகைக்கடன்கள், நடுத்தர கால கடன்களாக மாற்றப்பட்ட குறுகியகால கடன்கள், நடுத்தர கால கடன்கள், நீண்டகால பண்ணை கடன்கள் ஆகியவற்றில் கடன் தொகை, வட்டி, அபராத வட்டி மற்றும் இதர கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இதில் 2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போர் சிறு விவசாயிகள் என்றும், 2.5 ஏக்கர் வரை வைத்திருப்போர் குறு விவசாயிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றனர். குற்ற விசாரணை உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளில் உள்ள கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. சில கடன்களில், விசாரணையின் இறுதித் தீர்ப்பை பொருத்து, கடன் தள்ளுபடி செய்யப்படும். பினாமி கடன்கள், போலி சான்றுகள் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தாது.

கணக்கிடுவது எப்படி?

இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகை, வட்டி, அபராத வட்டி மற்றும் இதர கட்டணங்கள் தொகுக்கப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதில், கடன் தொகை மற்றும் வட்டி ஆகிய வற்றை வங்கிகளுக்கு அரசு செலுத்தும். அபராத வட்டி மற்றும் இதர தொகைகளை கூட்டுறவு சங்கங்களே ஏற்கும். விவசாய பயிர்க்கடன்களுக்கு அரசால் மானியம் வழங்கப்பட்டிருந்தால், அத்தொகை தவிர மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப் படும்.

விவசாய தேவைக்காக உரிய பட்டா, சிட்டா பெறப்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப் படும். ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு இந்த கடன்களுக்கு எந்த வட்டி, அபராத வட்டியும் வசூ லிக்கப்பட மாட்டாது. அவ்வாறு வசூலிக்கப்பட்டிருந் தால் அவை விவசாயிகளின் கணக்கில் கழித் துக் கொள்ளப் படும். பங்கு மூலதனம் செலுத்தி யுள்ள விவ சாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அந்த பங்கு மூலதனத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது. அந்த தொகை அடிப்ப டையில், புதிய கடன்களை விவ சாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்திய வர்களும், சர்க்கரை ஆலைகள் மூலமாக கடனுக்கான தொகையை ஈடு செய்தவர்களும் இந்த தள்ளுபடி திட்டத்தில் வருகின் றனர். இவர்கள் கட்டிய தொகை, ஓராண்டுக்கு கூட்டுறவு சங்கங் களில் வைப்புத்தொகை யாக வைக் கப்படும். ஓராண்டுக்கு பிறகு தொகையை பெற்றுக் கொள்ள லாம்.

வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படுவதால், எந்த நிலுவையும் இல்லை என்ப தற்கான சான்று ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.

நடவடிக்கை இல்லை

கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் மீது கூட்டுறவு சங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கடன் தள்ளுபடி பெற்ற விவ சாயிகள் புதிய வங்கிக்கடன்கள் பெற்றுக் கொள்ளலாம். கடன் தள்ளுபடி குறித்து ஒவ்வொரு விவசாயிக்கும் சங்கங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும். கடனுக்காக ஈடாக பெற்ற அனைத்து அசல் ஆவணங்கள், நகை உள்ளிட்டவை நிலுவை யின்மை சான்றுடன் உடனடியாக வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் பெயர், கடன் எண், தள்ளுபடி தொகை உள்ளிட்ட விவரங்கள் கூட்டுறவு சங்கங்களின் அறிவிப்பு பலகை யில் வெளியிடப்படும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.