தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !

Filed under: தமிழகம் |

சென்னை: இன்று முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 88 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். அவசர தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பல குடும்ப அட்டைகார்கள் கடைக்கு வந்தால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனப்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் யாருக்கு எப்பொழுது விநியோகம் செய்யப்படும் என்ற விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம், குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, ஏப்ரல் மாதம் குடும்ப அட்டை தாரர்களுக்கு, இதுவரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.