தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய “குடிசைக்குடியிருப்பு” பகுதியான மும்பை தாராவியில் எறத்தாழ ஏழு லெட்சம் மக்கள் குடியிருக்கின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து பல வகைப்பட்ட மக்கள் அங்கு வசித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்.

வ. கெளதமன்

கண்ணுக்கு தெரியாத கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் அதுவும் மகாராஷ்ட்ராமாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பினை ஏற்ப்படுத்தி அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையின் முக்கிய பகுதியானதாராவியையும் நிலைகுலைய செய்து கொண்டிருக்கிறது.  

மகாராஷ்டிராவில் இதுவரை 2800 க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 178 பேர் இறந்திருக்கிறார்கள்.  மும்பை தாராவியில்மட்டும் 60 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் இறந்திருக்கிறார்கள். 10 க்கு 10 அடி இடத்தில் கூட 8 அல்லது 9 பேர் நெறுக்கியடித்து தாராவிகுடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது தமிழர்களை மிகப்பெரும் பாதிப்பில் இருந்து காக்க தமிழக முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந் நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் தலை நகரான டெல்லியில் மருத்துவ பணியில் இருந்த ஒரு செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது. அந்த செவிலியர்கேரளாவை சேர்ந்தவர் என்றவுடன் கேரள முதலமைச்சர் மரியாதைக்குறிய பினராயி விஜயன்  அவர்கள் உடனடியாக டெல்லி முதலமைச்சர்மரியாதைக்குறிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி கேரளாவை சேர்ந்த எங்கள் செவிலியருக்கும் எங்களின்மக்களுக்கும் தக்க பாதுகாப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

அதுபோல் தாங்களும் மகாராஸ்ட்ரா முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு உத்தவ் தாக்கரே அவர்களை தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும்மும்பை தமிழர்களை பாதுகாப்பதற்க்கான அனைத்து ஏற்ப்பாடுகளையும் செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மும்பை தாராவியில் முதல் கோரோனா தொற்று இருப்பது அறியப்பட்டவுடன் உலக சுகாதார மையம் WHO உடனே எச்சரிக்கை விடுத்துஅதிகமான  குடிசைகளும் மக்கள் அடர்த்தியும் உள்ள இப்பகுதியில் கொரோனா பற்றி பரவினால் அளவிடமுடியாத பாதிப்பினை சந்திக்கநேரிடும் எனவே அதீத கவனம் தேவை என அறிவித்ததை மத்திய அரசும், மகாராஸ்ட்ரா மற்றும் தமிழக அரசுகளும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

போர்க்கால நடவடிக்கையாக தமிழர்கள் மற்றும் பிற மாநில மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் தேவைப்பட்டால் தற்காலிகமாகபாதுக்காப்பான மாற்றுயிடங்களுக்கு செல்ல ஏற்ப்பாடு செய்யவும் அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவத்திற்க்கு கூடுதல் கவனம்செலுத்தவும் மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் கோரிக்கைவைக்கும் படி தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ. கெளதமன் அறிக்கை.