தமிழக போலீசார் தேடிவந்தவரை போட்டு தள்ளிய கேரள போலீஸ் !!

Filed under: இந்தியா |

தமிழக போலீஸார் தேடி வந்த புதுக்கோட்டை நக்ஸலைட் வேல்முருகனை, கேரள போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் வயநாடு மலைப் பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நக்ஸலைட்களும் உள்ளனர்.

விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நக்சலைட்டுகள்தான் காரணம் என கேரள அரசு ஏற்கனவே குற்றம் சாட்டிருந்தது.இதனால் நக்சலைட்டுகளை ஒழிக்க “தண்டர் போல்ட் அதிரடிப் படையை’ கேரள அரசு உருவாக்கியது. அவர் களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்கியது.
இந்த நிலையில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் புதுக்கோட்டை வேல்முருகன் வயநாடு பகுதியில் கேரள போலீஸார் என்கவுன்டர் செய்தனர். வேல்முருகன் உடலை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு அனுப்ப போலீஸார் மறுத்துவிட்டனர்.

அதற்கு பதிலாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மக்களின் அஞ்சலிக்குப் பின்பு எரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லாப்பள்ளி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அப்பாவியான வேல்முருகன் வறுமையில் வாடினார். அவரை இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மாவோயிஸ்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்