தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ…!

Filed under: சினிமா |

Dwayne-Bravo-Movie-Debut-Press-Release-Pic-300x219பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவர் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சார்பாக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான இவர் சிறந்த டான்சரும் கூட.

கிரிக்கெட் விளையாட்டின் போது இவர், ‌விக்கெட் வீழ்த்தி விட்டால் போதும் மைதானத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் ஆடி விடுவார். இதற்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், கிரிக்கெட்டில் பிரபலமான இவரை சினிமாவுக்கும் அழைத்து வந்துள்ளனர். அதுவும் தமிழ் படத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் போட வைத்துள்ளனர். முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ், ‘உலா’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் விதார்த், அசோக், ராதிகா ஆப்தே மற்றும் சில புதுமுகங்கள் நடிக்கின்றனர். ராஜன் மாதவ்வின் சகோதரர் ஷாஜன் மாதவ் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தான் பிராவோ கலக்கல் ஆட்டம் போட உள்ளார்.

மைதானத்தில் பிராவோவின் நடனத்தை பார்த்து தான் இந்தப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குநர்.

இதுதொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய பிராவோ, சென்னை என் பிறந்த ஊர் ‌போன்றது. கிரிக்கெட் தவிர பாட்டு கேட்பது, நடனம் ஆடுவது ரொம்ப பிடிக்கும். சினிமாவை பற்றி அந்தளவுக்கு தெரியாது.

இருந்தாலும் இந்திய சினிமாவை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகர் ஷாரூக்கான், அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே இந்தியில் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். கிரிக்கெட்டிற்கு தான் நான் எப்போதும் முதல் இடம் ‌கொடுப்பேன்.

இன்னும் ஒரு 6-7 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிக்கெட்டில் நான் ஓய்வு‌பெற்று விட்டால் பிறகு சினிமாவில் நடிக்கலாம், இயக்கலாம், ஏன் படம் கூட படம் தயாரிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். எனக்கு இந்த படத்தில் ஒரு சிறிய ரோல் கொடுத்து ஆட வைத்துள்ளார்கள்.

அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன், அவர்களுக்கு என் நன்றியையும் கூறிக்கொள்கிறேன். இந்திய பெண்களை ரொம்ப பிடிக்கும். அவர்கள் அழகானவர்கள் என்றார்.

இந்த பிரஸ் மீ்ட்டின் போது, மேடையிலேயே பிராவோ ஒரு கலக்கல் ஆட்டம் போட்டார். அது தான் அருகில் நீங்கள் பார்க்கும் படம்.