இன்று காலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள பள்ளியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுத வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்து இருந்தாலும் இன்னும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஓராண்டு ஆட்சி நிறைவு செய்திருக்கும் நிலையில் இந்த தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது.