அகில இந்திய காங்கிரசின் துணைத்தலைவர் மற்றும் இளம் புயல் ராகுல்காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள். சொல்லவேண்டியதை மசாலாக்கள் சேர்த்து புத்திசாலித்தனமாகக் கண்டித்து பேசத்தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்களை குழப்பிவிட்டார் என்று கூறுகிறார்கள். பிரதமர், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர ஆலோசித்து குற்றவாளிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுப்பதைத் தடுக்க சட்டம் தேவைப்பட்டது. ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக மாற்றி பழிவாங்கும் நடவடிக்கைகளை தடுக்க சில விதிகளை சேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் புதிய விதிகளை சேர்க்காமல் கொண்டு வந்த சட்டம் குடியரசுத் தலைவரையும் குழப்பிவிட்டதாம்.
ஆனால் ராகுல்காந்தி சொன்ன கருத்து பிரதமரையும், பிரதமர் பதவியையும் உலுக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். தங்களை ஆதரித்ததால், மாயாவதி¬யுயம், முலாயம்சிங் யாதவையும் மெதுவாக விலக்கி தப்பிக்கவைத்த மத்திய அரசு, தற்போது ராகுலின் கருத்தால் அடியோடு மிரண்டு போயிருக்கிறது. காரணம் லாலுபிரசாத், தி.மு.க. கட்சிகள், உச்சநீதிமன்றத்தால் கடுமையாக தண்டிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற அரசியல்வாதிகள் இனி காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று குறிப்பிடுகிறார்கள்.
மேலும் தெலுங்கானா விவகாரம், ஆந்திர காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் விலகவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் மத்திய அரசு விரைவில் கவிழ்ந்து, பாராளுமன்ற தேர்தலை வேண்டாவெறுப்பாக காங்கிரஸ் நடத்தக்கூடிய சூழ்நிலையை உண்டாக்கும் என்ற கருத்து தலைநகரில் பரவலாக உள்ளது. நரேந்திரமோடியின் எழுச்சியை விட, விலைவாசி உயர்வு, ஊழல் ஆதிக்கம், பிரதமரின் நிர்வாகத்திறமை இன்மை வடஇந்திய மக்களை பெரிதும் பாதித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கர்நாடகம், கேரளம், ஆந்திரா காங்கிரசுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தலாம் என்ற கணிப்பு உள்ளதாம். இதனால் எப்பாடுபட்டாலும் தமிழக தி.மு.க.வை வெட்டிவிட காங்கிரஸ் விரும்பவில்லை என்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி தி.மு.க. ஆதரவு தரும் காங்கிரஸ் தலைவரை தமிழகத்திற்கு தலைவராக நியமிக்கும் நிகழ்ச்சி நடைபெறலாம் என்கிறார்கள். மேலும் இடதுசாரிகள் 3வது அணி என்று பூச்சாண்டி காட்டினாலும் கடைசியில் தங்களை மம்தாவிடம் இருந்து காப்பாற்ற காங்கிரசை சரணடைவார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. தமிழக முதல்வரை சொத்துகுவிப்பு வழக்கிலும், வெளிநாட்டு பணம் வந்த வழக்கிலும் கட்டிப்போட கர்நாடக முன்னாள் முதல்வர், மத்திய கர்நாடக அமைச்சர், தமிழக மத்திய அமைச்சர் குழு படு தீவிரமாக செயல்படுவதாக உயர்மட்ட அதிகாரிகள் கிசுகிசுக்கிறார்கள்.
புரட்சித்தலைவியின் எழுச்சி காங்கிரசுக்கு ஆப்பு அடிக்கும் என்ற பயஉணர்வு அதிகம் உள்ளதாம். மேலும் தற்போதைய இலங்கை அதிபர் தமிழகத்தில் தன்பெயரில் தொடங்கிய விமான நிறுவனத்தின் கிளைகளை திருச்சி, மதுரையில் மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்துவதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளனவாம். இலங்கை அதிபர் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் தமிழக முதல்வரை செயலிழக்கும் திட்டத்தைத் தீட்டி உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.
இலங்கை அதிபரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாக அரசியல் நடத்தி தமிழக மக்களை ஏமாற்றும் தமிழக கட்சிகள், இலங்கை அதிபரின் விமான நிறுவனம் வெற்றிகரமாக நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக இலங்கைத்தமிழர்கள் கூறுகிறார்களாம். தற்போது இலங்கையில் வெற்றிபெற்ற தமிழ் கட்சிகள் இந்திய அரசின் தலையீட்டை வெறுப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன. புரட்சிதலைவியின் பாராளுமன்ற வெற்றி இலங்கையை இணைக்கலாம் என்ற பய உணர்வு இந்த புதிய தமிழ்கட்சிக்கு இலங்கையில் ஏற்பட்டு உள்ளதாம். தங்கள் சுய வாழ்வுக்காக இலங்கைத் தமிழர்களை இலங்கை அதிபரின் காலடியில் சமர்பிக்க இலங்கை தமிழ் கட்சிகள் ஏற்படுத்தும் என்ற கணிப்பு உள்ளதாம்.
புரட்சித்தலைவியை ஒரு பக்கம் நீதிமன்ற வழக்குகளில் அலையவிடுவது, அ.தி.மு.க.வை தங்கள் முழு பலத்துடன் செயல் இழக்கச் செய்வது, அதிகாரம், பணம் கொண்டு கூட்டணி கட்சிகளுடன் தமிழக மக்களை பணிய வைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தத் திட்டம் தீட்டி உள்ளார்களாம். உண்மையில் உச்சநீதிமன்றம் சுதந்திரமாகவும், கண்டிப்புடன் செயல்படுவதைக்கண்டு ஆளும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் அலறுகிறார்களாம்.