தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Filed under: சினிமா |

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் அமெரிக்காவில் சென்று பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹாலிவுட் மற்றும் சில பாலிவுட் படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.