“தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

Filed under: சினிமா |

டிசம்பர் 9ம் தேதி நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த “தாதா” திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளேன் என்றும் யோகிபாபு கூறியுள்ளார்.

இன்று யோகி பாபு நடிப்பில் உருவான “தாதா” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்றும், இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகிபாபு தான் ஹீரோ என்று விளம்பரப்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் யோகிபாபு இது குறித்து விளக்கமளித்துள்ளார். “தாதா” திரைப்படத்தில் நான் ஹீரோ இல்லை. ஹீரோவாக நடித்துள்ள நிதின் சத்யாவுக்கு நண்பர் கேரக்டரில் நடித்துள்ளேன். நான் ஹீரோ என்று விளம்பரப்படுத்தப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.