தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகள் இருந்த மகன் கைது!

Filed under: உலகம் |

போலந்து நாட்டில் தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக மம்மி போல் வீட்டிலேயே பாதுகாத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இது குறித்து விசாரணை செய்தபோது தாய் மீது கொண்ட அன்பால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இறந்த உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் மம்மி போல் பாதுகாத்து வைத்தது சட்டப்படி குற்றம் என்று அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். தாயின் மீது உள்ள அன்பு காரணமாக 13 ஆண்டுகளாக மம்மி போல் உடலை பாதுகாத்து வைத்த மகன் தற்போது சிறையிலிருக்கிறார்.