சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவி இருக்க வாய்ப்பு – ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தகவல்!

Filed under: உலகம் |

சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கியமான இடமாக கூறப்படும் உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்கிள் சென்ற ஆகஸ்ட் மாதமே வைரஸ் இருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது.

அதே சமயத்தில் இருமல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை பற்றி இணையத்தில் அதிகமாக தேடல்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்த ஆய்வு நடைபெற்றது.

மேலும், இது அதிகரித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் என தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

சீனாவின் உகான் நகரின் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கு முன்பே இது பரவ ஆரம்பித்து இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.