கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தூத்துகுடி மாவட்ட நிர்வாகி திடீரென திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் என்பது தமிழக வெற்றி கழகமாக மாறி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் அப்படியே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளாக மாறுவார்கள் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துகுடி மாவட்ட நிர்வாகியாக இருக்கும் பில்லா ஜெகன் என்பவர் திடீரென திமுகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இவர் திமுகவில் தான் இருந்ததாகவும் அதன் பின் சில பிரச்சினைகள் காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் திமுகவில் அவரை இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகியாக பில்லா ஜெகனின் தம்பி சுமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்த ஒரே வாரத்தில் ஒரு விக்கெட் இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.