கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு.

Filed under: தமிழகம் |

கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் 12-ம் நாளான இன்று ( திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பட்டு பனகல் வீதி, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி தெரு, கீழவாணி மூல வீதி, தெற்கு வாணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரம் ஆகிய பகுதிகளில் எழுந்தருளினார்.