திருப்பதி கோவிலில் நடிகர் பிரபாஸ்!

Filed under: இந்தியா,சினிமா |

திருப்பதி கோவிலில் இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் தரிசனம் செய்தார்.

நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. ஆனால், “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார். இப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. விரைவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. நேற்று பிரபாஸ் திருப்பதி கோயிலுக்கு சென்று, அதிகாலையில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிவிட்டு வெளியே வந்த அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். “ஆதிபுரூஸ்” திரைப்படம் வரும் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படம் டீசரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.