திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திருமண விழா ஒன்றில், “அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு தொண்டர் இந்த கட்சியை வழிநடத்துவார்” என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், “ஐம்பது ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான். டெல்டா விவசாயிகள் பாதுகாக்கப்பட்டது அதிமுக அரசில்தான். அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் உள்ளனர் என்றால் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் யாராவது ஒரு பழனிசாமி கட்சியை வழிநடத்துவார். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி இது. அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியாது. டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசுதான். திமுக அரசில் மும்முனை மின்சாரம் வழங்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசியுள்ளார்.